| 245 |
: |
_ _ |a கீழக்கடம்பூர் ருத்ரபதி கோயில் - |
| 246 |
: |
_ _ |a ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் கோயில் |
| 520 |
: |
_ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம். பிற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. தற்போது கூரைப்பகுதி வரை மட்டுமே காட்சியளிக்கிறது. தளங்கள் இடம் பெறவில்லை. எனவே எந்த பாணியில் கட்டப்பட்டது என்பதும், எத்தனை தளங்கள் உடையது என்பதும் அறியக்கூடவில்லை. இக்கோயிலில் தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரி ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் இக்கோயிலின் தனிச்சிறப்பானது 63 நாயன்மார்களின் வரலாற்றினை சிற்பவடிவமாக பெற்றுத் திகழ்வதாகும். ஆனால் நாயன்மார் சிற்பம் தற்போது காணப்படவில்லை. காலவெள்ளத்தால் அழிந்து விட்டன போலும். ஆனால் சிற்பங்கள் இருந்தமைக்கான சிறு சிறு கோட்டங்கள் கருவறை விமானச் சுவர்ப்பகுதியில் காணப்படுகின்றது. இக்கோட்டத்தின் கீழே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடன் நாயன்மார்களின் பெயர்கள் காணப்படுகின்றன. கருவறையில் இலிங்கம் உள்ளது. கருவறை சதுர வடிவமானது. முகமண்டபத்தில் நந்தி உள்ளது. மகாமண்டபம் இருந்திருக்க வேண்டும். அவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலைப் பொறுத்தவரை தேவகோட்டங்களில் மாதொரு பாகன் (அர்த்தநாரி), தென்முகக் கடவுள், இலிங்க புராண தேவர், சந்தியா நிருத்த தேவர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. நாயன்மார்களின் வரலாறுகள் சிற்பவடிவமாக பெற்றுத் திகழும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். காரைக்கால் அம்மையார் தலைகீழாகக் கயிலைக்குச் செல்லும் சிற்பமும், கண்ணப்ப நாயனார் சிற்பமும், சண்டிகேசுவரர் சிற்பமும், தாடகை என்ற பெண்ணடியார் சிவனை வழிபடும் சிற்பமும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். |
| 653 |
: |
_ _ |a கீழக்கடம்பூர் கோயில், கீழக்கடம்பூர் ருத்ரபதி கோயில், கீழக்கடம்பூர் சிவன் கோயில், இளங்கோயில், ஸ்ரீருத்ரகோடீஸ்வரர், உத்தமசோழ சதுர்வேதி மங்கலம், 63 நாயன்மார்கள் வரலாறு, 63 நாயன்மார்கள் சிற்பங்கள் அமைவிடம், பிற்காலச் சோழர் கோயில்கள், கி.பி.12-ஆம் நூற்றாண்டு கோயில்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள் |
| 700 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 710 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 905 |
: |
_ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 800ஆண்டுகள் பழமையானது. பிற்கால சோழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
| 914 |
: |
_ _ |a 11.23968921 |
| 915 |
: |
_ _ |a 79.52986024 |
| 916 |
: |
_ _ |a ருத்ரபதி, ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் |
| 927 |
: |
_ _ |a கடம்பூர் என்ற ஊர் கல்வெட்டில் “உத்தம சோழ சதுர்வேதி மங்கலம்“ என வழங்கப்பட்டுள்ளது. இவ்வூரில் உள்ள பழமையான சிவன் கோயில் ஸ்ரீருத்ரபதி கோயில் என வழங்கப்படுகிறது. இக்கோயில் தாங்குதளத்தில் கி.பி.12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் நாயன்மார் பெயர்களுடன் இறை உருவங்களின் பெயர்களும் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இக்கோயிலைப் பொறுத்தவரை தேவகோட்டங்களில் மாதொரு பாகன் (அர்த்தநாரி), தென்முகக் கடவுள், இலிங்க புராண தேவர், சந்தியா நிருத்த தேவர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. நாயன்மார்களின் வரலாறுகள் சிற்பவடிவமாக பெற்றுத் திகழும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். காரைக்கால் அம்மையார் தலைகீழாகக் கயிலைக்குச் செல்லும் சிற்பமும், கண்ணப்ப நாயனார் சிற்பமும், சண்டிகேசுவரர் சிற்பமும், தாடகை என்ற பெண்ணடியார் சிவனை வழிபடும் சிற்பமும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். |
| 930 |
: |
_ _ |a இந்திரன் இக்கோயிலுக்கு வந்து கோடி இலிங்கங்களை பிரதிட்டை செய்து ருத்ரகோடீஸ்வரர் என்ற இளங்கோயிலை எழுப்பி வழிபட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது. எனவே கீழக்கடம்பூர் கோயிலை இளங்கோயில் என்று அழைத்துள்ளனர். |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம். பிற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. தற்போது கூரைப்பகுதி வரை மட்டுமே காட்சியளிக்கிறது. தளங்கள் இடம் பெறவில்லை. எனவே எந்த பாணியில் கட்டப்பட்டது என்பதும், எத்தனை தளங்கள் உடையது என்பதும் அறியக்கூடவில்லை. இக்கோயிலில் தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரி ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் இக்கோயிலின் தனிச்சிறப்பானது 63 நாயன்மார்களின் வரலாற்றினை சிற்பவடிவமாக பெற்றுத் திகழ்வதாகும். ஆனால் நாயன்மார் சிற்பம் தற்போது காணப்படவில்லை. காலவெள்ளத்தால் அழிந்து விட்டன போலும். ஆனால் சிற்பங்கள் இருந்தமைக்கான சிறு சிறு கோட்டங்கள் கருவறை விமானச் சுவர்ப்பகுதியில் காணப்படுகின்றது. இக்கோட்டத்தின் கீழே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடன் நாயன்மார்களின் பெயர்கள் காணப்படுகின்றன. கருவறையில் இலிங்கம் உள்ளது. கருவறை சதுர வடிவமானது. முகமண்டபத்தில் நந்தி உள்ளது. மகாமண்டபம் இருந்திருக்க வேண்டும். அவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. |
| 933 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a காட்டுமன்னார்குடி சிவன் கோயில், மேலக்கடம்பூர் சிவன் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில் |
| 935 |
: |
_ _ |a கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் காட்டுமன்னார் குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி வழியாக செல்லலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
| 937 |
: |
_ _ |a காட்டுமன்னார்குடி, சிதம்பரம் |
| 938 |
: |
_ _ |a சிதம்பரம் |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a சிதம்பரம், கடலூர் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000036 |
| barcode |
: |
TVA_TEM_000036 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_அப்பர்-0022.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_சுவர்-0003.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_மேற்குபுறம்-0002.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_தூண்-0004.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கோயில்-வளாகம்-0005.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_தகவல்-பலகை-0006.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_தென்கிழக்கு-தோற்றம்-0007.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கருவறை-முகப்பு-0008.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கருவறை-0009.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_தட்சிணாமூர்த்தி-0010.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கோட்டம்-0011.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_இலக்குமி-0012.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_இலிங்கம்-0013.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_நந்தி-0014.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_இலிங்கோத்பவர்-0015.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கல்வெட்டு-0016.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கல்வெட்டு-0017.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கல்வெட்டு-0018.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கல்வெட்டு-0019.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_நாயன்மார்-கோட்டம்-0020.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_கஜசம்ஹாரமூர்த்தி-0021.jpg
TVA_TEM_000036/TVA_TEM_00000036_ருத்திரபதி-கோயில்_அப்பர்-0022.jpg
|